×

டி20யில் பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு ரோகித் சர்மாவுக்கு இரண்டு சிக்சர்கள் தேவை: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மும்பை: டி20 போட்டிகளில் இன்னும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன்னேறுவார். தற்போது 171 சிக்ஸர்களுடன் ரோகித் இரண்டாம் இடத்தில் உள்ளார். 172  சிக்ஸர்களுடன் நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குப்டில்  முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார், அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் மோர்கன் உள்ளார்.இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்ஸர்களும் அடங்கும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post டி20யில் பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு ரோகித் சர்மாவுக்கு இரண்டு சிக்சர்கள் தேவை: ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : D20 ,Rokith Sharm ,Mumbai ,India ,Rohit ,T20 ,Rogid Sharmah ,Dinakaran ,
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...